Council of Governments (COG)
அரசுகளின் கூட்டமைப்பு
தமிழ் விளக்கம்
அருகருகே அமைந்துள்ள பல உள்ளாட்சி (கிராமங்கள், நகரங்கள், மாவட்டங்கள்) அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, தங்கள் பகுதி மக்களின் பரஸ்பரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்களிடமுள்ள ஆதாரங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த்துவதை விரிவான திட்டமிடல் எனலாம். இதை நடைமுறைப்படுத்த விரிவான திட்டமிடல் நிறுவனங்கள் உதவுகின்றன. ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக தங்கள் தேவைகளை அவர்களுக்கு மேலுள்ள மாநில மற்றும் தேசிய அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று காரியமாற்றுவதைவிட தங்களுக்குள் ஒன்றுகூடி திட்டமிடுவதாலும், தங்களுடைய முயற்சிகளை ஒருங்கிணைப்பதாலும் எளிதாகக் காரியமாற்றலாம். போக்குவரத்து, குடிநீர் வினியோகம், கழிவுநீர் சுத்தகரிப்பு, மின்சார வினியோகம், சட்ட ஒழுங்குப் பிரச்சனை மற்றும் சமூகநலப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண விரிவான திட்டமிடல் நிறுவனங்கள் உதவுகின்றன. அருகருகே அமைதுள்ள நாடுகள் அல்லது ஒரு பூகோளப் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகள் (உ.ம் சார்க் நாடுகள்) ஒன்றுகூடித் திட்டமிடலும் இந்த வகையில் அடங்கும்.
English
Comprehensive planning organizations comprising representatives of several local governments that are usually in geographic proximity (that is, several towns, cities, and counties in an area). COG members meet periodically to consider the mutual needs of the people in the area and ways of combining resources to meet those needs. Their purposes include planning, coordinating, and integrating their respective efforts and achieving more influence with their state governments and at the national level than could be achieved through their isolated efforts. Typical service-planning activities include transportation, water and sewage treatment, and services to older people.