Council of International Programs (CIP)
சர்வதேச நிகழ்ச்சிகளுக்கான குழு
தமிழ் விளக்கம்
சமூகப்பணியாளர்கள் மற்றும் மானுட சேவைப் பணியாளர்களின் கல்வி மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனைக்கு ஊக்கமளிக்கும் முகமாக, 1956 ஆம் ஆண்டு ஆர்லிங்டன் (வர்ஜீனியா) நகரத்தைத் தலையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நிகழ்ச்சிகளுக்கான சமூகப்பணி அமைப்பு. சமூகப்பணியாளர்கள், சமூகப்பணி மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் கல்வி மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனையின் மூலம் தங்களின் அனுபவத்தையும், செயல்திறனையும் மேம்படுத்திக்கொள்ள இந்த நிறுவனம் உதவி செய்கிறது. அறக்கட்டளைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் 120 நாடுகளின் நிதி உதவியுடன் இந்நிறுவனம் தன் பணிகளைச் செய்கிறது.
சர்வதேச நிகழ்ச்சிகளுக்கான சபை - அமெரிக்கத் தொழில் நுட்பத்தின் மூலமும், அமெரிக்கக் கலாச்சாரப் பரிமாற்றத்தின் மூலமும் உலகெங்கிலுமுள்ள சமூகங்களின் மாறி வரும் போக்கைக் கையாளமுடியுமென்று அமெரிக்காவிற்குப் பயிற்சிக்காகவும், கலாச்சாரப் பரிமாற்றத்திற்காகவும் வர விரும்புவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களுக்கான ஜெ -1 (கலாச்சாரச் செயல்களுக்கான நுழைவு அனுமதி) விசா எடுத்துத்தருவது, பயிற்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற சேவைகளைச் செய்து வரும் நிறுவனம்

English
The international social work organization, founded in 1956 and headquartered in Arlington, Virginia, to facilitate educational and cultural programs for professionals in human services fields. CIP helps social work practitioners, students, and administrators develop their knowledge and skills through sponsored work study exchanges in other countries. It is funded by contributions from foundations, corporations, and more than 120 participating nations.