Council of Nephrology Social Workers (CNSW)
சிறுநீரகவியல் சமூகப் பணியாளர் கவுன்சில்
தமிழ் விளக்கம்
சிறுநீரகவியல் என்பது ஆண் மற்றும் பெண்களின் சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க மண்டலம் போன்றவற்றில் ஏற்படும் குறைகளைத் தகுந்த சிகிச்சை முறையில் குணமாக்குவது தொடர்பாக ஆராய்ந்து படிக்கும் மருத்துவத் துறையாகும். இத்துறை நிபுணர்கள் ‘யூராலஜிஸ்ட்’ என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சிறுநீரகம் தொடர்பான நோய்களைக் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளித்து குணமாக்கும் பயிற்சி பெற்றிருப்பார்கள். சிறுநீரகவியல் துறையானது, புற்று நோயியல் (ஆன்காலஜி), பெண்களுக்கு ஏற்படும் நோய்களை படிக்கும் கைனகாலஜி, ஆண்மையியல் எனப்படும் ஆன்ட்ராலஜி, குழந்தை மருத்துவம், இரைப்பையியல் எனப்படும் கேஸ்டிரோ என்டிராலஜி மற்றும் நாளமில்லா சுரப்பியியல் எனப்படும் என்டோகிரைனாலஜி ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிறுநீரகவியல் நோய்கள் தொடர்பாக சிகிச்சை பெறுபவர்களுக்கு அவர்களுக்கு வந்திருக்கும் நோயை விளக்கிச் சொல்லவும், நோயை ஏற்றுக்கொள்ளச் செய்யவும், அதற்கான ஆலோசனைகளைச் சொல்லி நோயாளிகளை பயத்திலிருந்து விடுவிக்கவும் சமூகப்பணியாளர்கள் செயல்படுவார்கள்.
English
A professional association of social workers that is an advisory unit and integral part of the National Kidney Foundation. Founded in 1973, CNSW comprises primarily medical and health care social workers who are concerned about social services for people with kidney disease, urinary system disorders, diabetes, collagen disease, and related disorders. See also medical social work.