countertransference
எதிர்மறை இடமாற்றீடு
தமிழ் விளக்கம்
Transference என்றால் வாடிக்கையாளர் தன்னுடைய ஆழ்மன உணர்வுகளை சமூகப் பணியாளரிடம் (உளப்பிணி மருத்துவர்) பகிர்ந்துகொள்ளல். இந்த ஆழ்மனப் பகிர்வு சமூகப் பணியாளர் மீதான கவர்ச்சியாகவோ, சிற்றின்ப இச்சையாகவோ, கோபம், ஆத்திரமாகவோ, அவநம்பிக்கையாகவோ, பெற்றோர் சகோதர நிலை சார்ந்ததாகவோ, அல்லது குரு நிலை கொண்டதாகவோ இருக்கலாம். சமூகப் பணியாளரை சமூகப்பணியாளராகப் பார்க்காமல் வேறுவிதமாகப் பார்ப்பது சிகிச்சையின் பலனைக் குறைக்கலாம் / தடங்கல் ஏற்படுத்தலாம். countertransference என்பது சமூகப் பணியாளரே தன் ஆழ்மன உணர்வுகளின் அடிப்படையில், சுய உணர்வுடனோ, சுய உணர்வின்றியோ வாடிக்கையாளரை பெற்றோர் சகோதர நிலை சார்ந்தோ, தன்னுடைய மதிப்பீடுகளின் படி வாடிக்கையாளர் மீது கோபம், ஆத்திரம் கொண்டோ, சிற்றின்ப நாட்டம் கொண்டோ வாடிக்கையாளரைப் பார்ப்பது. உளஇயக்கக் கோட்பாட்டின்படி சமூகப் பணியாளரின் வளர்ச்சிப் பருவ அனுபவ முரண்பாடுகளின் அடிப்படையில் இது அமையலாம். சமூகப்பணியாளர், தனது உணர்வுகளை நுட்பமாக உணர்ந்து புரிந்து கொள்ளாவிட்டால் அவர் அளிக்கும் சிகிச்சை எதிர்பார்த்த பலனைத் தரவியலாது போகலாம்.
English
A set of conscious or unconscious emotional reactions to a client experienced by the social worker or other professional, usually in a clinical setting. According to psychodynamic theory, these feelings originate in the social worker's own developmental conflicts and are projected onto the client. Countertransference is identical to transference except that it applies to the feelings, wishes, and defensive operations of the social worker or therapist toward the client. Like transference, it must be constantly monitored and understood.