covenant model
நம்பிக்கையான உடன்பாடு, திடமான உறுதிப்பாடு, புனிதமான, பவித்திரமான ஒப்பந்தம்
தமிழ் விளக்கம்
இது சமூகப்பணியாளர் தன் வாடிக்கையாளருடன் ஏற்படுத்திக்கொளும் உறவு முறையைக் குறிக்கும் சொல். சாதாரண ஒப்பந்தத்தில் (contract model) ஒரு சமூகப்பணியாளரும் அவரிடம் உதவி கேட்டு வரும் வாடிக்கையாளரும் ஆரம்பத்திலே அவர்கள் என்ன நோக்கத்திற்காக இணைந்து பணியாற்ற உள்ளார்கள், அந்த நோக்கத்தை எப்படி அடையவிருக்கின்றார்கள், அதற்கான கால அவகாசமென்ன, அதைச் சார்ந்த மற்ற நடைமுறைகள் என்ன என்பது பற்றி வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ அல்லது புரிதலாகவோ வெளிப்படுத்தி செயலைத் தொடங்குவார்கள். இந்தத் திடமான, பவித்திரமான ஒப்பந்தத்தில் (covenant model), வாடிக்கையாளரின் தேவைகள் என்ன என்று முன்கூட்டியே வெளிப்படுத்தப்படாவிட்டாலும், அவருடைய தேவைகள் அனைத்தையூம் புரிந்துகொண்டு, தன்னால் முடிந்த அளவு, முழுமையாக வாடிக்கையாளருக்கு உதவுவதாக சமூகப்பணியாளர் கொடுக்கும் திடமான உறுதிமொழி. ஆகையால் இது சாதாரண ஒப்பந்த மாதிரியிலிருந்து வேறுபட்டது. இந்த ஒப்பந்தத்தை விளக்க வந்த பமீலா மில்லர் என்ற சமூகப்பணிக் கல்வியாளர், இதன்படி சமூகப்பணியாளர் தன் வாடிக்கையாளருக்கு வருநெறி உரைக்கும் நல்லாசிரியனாகவும், சகாவாகவும், வாழ்நாளெல்லாம் வாடிக்கையாளர் நலம் விரும்பியாக, சமூக சேவையாற்றக் கொடுக்கும் உறுதி மொழியும் கூட என்கிறார்.
English
An orientation in the social work relationship in which the social worker implicitly or explicitly promises a commitment to empathetically serve the whole client inclusively and to work toward meeting the client's maximum needs, whether or not the needs are known or specified in advance. This model is in contrast to the contract model, which limits the goals, more narrowly defines client needs, and explicates the procedures for meeting them. According to Pamela Miller (“Covenant Model for Professional Relationships,”Social Work, 35[March 1990], pp. 121–125), the covenant model emphasizes the social worker's role as teacher and companion to the client and commitment to a life of service to society.