CPI

நுகர்வோர் விலைக் குறியீட்டெண் / சுட்டெண்

தமிழ் விளக்கம்

இந்தியாவில் நுகர்வோர் விலைக் குறியீட்டென்னைக் கணக்கிட அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்தும் 435 பொருள்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இப்பொருள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. 1. உணவுப் பண்டங்கள், 2. எரிபொருள்கள், 3. உற்பத்திப் பொருள்கள். முதல் பிரிவான உணவுப் பண்டங்களில் அரிசி, கோதுமை, காய்கறி, பால், பழம், எண்ணெய் உள்ளிட்ட 98 பொருள்கள் இடம் பெறுகின்றன. இரண்டாவது பிரிவில் பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்ற 19 எரிபொருள்கள் இடம் பெறுகின்றன. மூன்றாவது பிரிவில் துணி, காகிதம், போக்குவரத்து சாதனங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட 318 பொருள்கள் இடம் பெறுகின்றன. இந்த மூன்று பிரிவிற்கும் அதனதன் முக்கியத்துவம் மற்றும் பொருள்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ‘வெயிட்டேஜ்’ வழங்கப்படுகிறது. அதாவது முதல் பிரிவான உணவுப் பண்டங்களுக்கு 22 சதவீதமும், இரண்டாவது பிரிவான எரிபொருள் களுக்கு 14 சதவீதமும் வெயிட்டேஜ் கொடுக்கப்படுகிறது.

English

See Consumer Price Index (CPI).