CPS

குழந்தைகளுக்கான பாதுகாப்பு சேவைகள்

தமிழ் விளக்கம்

ஒரு குழந்தையின் பாதுகாவலரால் வழங்கப்படமுடியாத சமூக, மருத்துவ, சட்ட, தங்குமிட மற்றும் பாதுகாப்பு சேவைகள் இதிலடங்கும். அரசு நிறுவனங்களில் பணியாற்றும் சமூகப்பணியாளர்கள், உதவி தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து, சட்ட அமலாக்க அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும், குழந்தைகளுக்குத் தேவைப்படும் உதவிகளைப் பெறவும், தாங்களே செய்து தரவும் முயல்கின்றனர். குழந்தைகள் புறக்கணிக்கப்படும் போதும், அவர்கள் நெறியற்ற வழியில் நடத்தப்படும்போதும் அதை விசாரித்து, உரிய பரிந்துரைகளோடு சட்ட அதிகாரிகளிடமோ, சமூகநலத் துறையினரிடமோ சமர்ப்பிக்கின்றனர். குழந்தைப் பாதுகாப்பு சேவைகள் மூலமாகத் தங்குமிட வசதிகளும், சமுதாயக் கண்காணிப்பாளர்கள் சேவையும் ஏற்பாடு செய்து தரப்படுகின்றது.

English

See child protective services (CPS).