crime

குற்றம், சட்ட விரோதமான செயல், தீச்செயல்

தமிழ் விளக்கம்

குற்றம் என்பது விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறி செய்யப்படும் செயலாகும். இத்தகைய செயல் அதிகார (சட்ட மன்றம் / நீதிமன்றம்) அமைப்புகளால் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் அல்லது எச்சரிக்கை செய்யப்ப்படலாம். குற்றத்திற்கான வரையறை, இடம் (மாநில, தேசிய, சர்வதேச), காலம், மற்றும் சமூக நெறிகளைப் பொறுத்து மாறுபடலாம். ஒவ்வொறு குற்றமும் சட்டமீறலாகும்; ஆனால் ஒவ்வொறு சட்டமீறலும் குற்றமாக வேண்டிய அவசியமில்லை.
குற்றங்கள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தனி நபருக்கு எதிரான குற்றம், வன்முறை தொடர்பான குற்றம், பாலியல் வன்முறை தொடர்பான குற்றம், சொத்து தொடர்பான குற்றம், மோசடி மற்றும் ஆள்மாறாட்டம், ஆயுதங்கள் மூலமாகத் தாக்குதல், தேசத் துரோக / அரசியல் குற்றங்கள், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைக் கையாளுதல், பொது ஒழுங்குமீறல், மோட்டார் வாகனக் குற்றங்கள், சதி, அடுத்தவரை குற்றம் செய்யத் தூண்டுதல் மற்றும் குற்றம் செய்ய முயற்சி செய்தல் உள்ளிட்டவையாகும்.
கடந்த காலத்தில் குற்றங்கள், அறநூலுக்கு மாறானவும், அரசியலுக்கு மாறானவும், தெய்வத்திற்கு மாறானவும் என மூவகையாகப் பிரிக்கப்பட்டன.
1.குடி பொய் களவு காமம் கொலை என்பன அறநூலுக்கு மாறானவை. இவை ஐம்பெருங் குற்றம் எனப்படும். பிறரிடம் வாங்கினதை மறுத்தலும், தன்னிடத்துள்ள பிறர் பொருளை ஒளித்தலும், கள்ளக் கையெழுத்தும், ஆள்மாறாட்டமும் பொய்யுள் அடங்கும் 2.இறையிறுக்காமை, உறுபொருள் கவர்தல், பகையொற்று, அரசனது பொருள் கவர்தல், அரசனது இன்பப் பொருள் நுகர்தல், ஊருக்கு அல்லது நாட்டிற்கு இரண்டகஞ் செய்தல், அரசற்கிரண்டகஞ் செய்தல், அரசாணை மீறல், கொள்ளை யடித்தல், கலகஞ்செய்தல் என்பன அரசியற்கு மாறான குற்றங்களாம். 3.ஒப்பிப் பணிசெய்யாமை, கோயிற் பொருட்கவர்வு என்பன தெய்வத்திற்கு மாறான குற்றங்கள். கோயிலில் விளக்கெரிப்பதைத் தண்டனையாகப் பெற்றவனும், கோயிலில் விளக்கெரிக்கப் பொன் பெற்றவனும், அங்ஙனம் எரிக்காமையும்; கோயிற் பண்டாரத்திடம் பெற்ற கடனுக்கு வட்டியிறுக்காமையும்; ஒப்பிப் பணிசெய்யாமையாகும். கோயிற் கலங்களையும் அணிகலங்களையும் களவாடலும், வழிபாட்டு விழாச் செலவைக் குறைத்தலும் அடியோடு நிறுத்தலும் கோயிற் பொருட் கவர்வாகும்.

English

Any behavior that violates a law. Some social scientists extend this definition to include any behavior that is contrary to the society's moral codes for which there are formalized group sanctions, whether or not they are institutionalized as laws.