criminal justice policy
குற்றவியல் நீதிக் கொள்கை
தமிழ் விளக்கம்
சட்ட விரோதமான நடத்தைகளைச் சமாளிக்கவும், அதைத் தடுக்கவும் ஒரு குறிப்பிட்ட சமூகம் / தேசம் பின்பற்றும் நடைமுறைகளை அச்சமூகத்தின் / தேசத்தின் குற்றவியல் நீதிக் கொள்கை என்கின்றனர். இந்த குற்றவியல் நீதிக்கொள்கையில் உள்ள பொதுவான தன்மைகள். 1. குற்றத்தை மறுக்கும் பொருட்டோ அல்லது நிரூபிக்கும் பொருட்டோ நீதிமன்ற விசாரணைக்கு உட்படும் உரிமை 2. வழக்கறிஞரை வைத்து வாதாட உரிமை 3. தீர்ப்பில் திருப்தி இல்லையென்றால் மேல்முறையீடு செய்யும் உரிமை 4. வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை நீதிமன்றத்தின் மூலம் கொண்டுவரும் உரிமை 5. ஒவ்வொரு குற்றத்திற்கும் வரையறுக்கப்பட்ட தண்டனை 6. சிறு குற்றங்களுக்கும், வாடிக்கையாகக் குற்றம் செய்யாதவர்களையும் சிறையிலடைக்காமல் கண்காணிப்பில் வைத்திருத்தல், 7. தண்டனைக் காலத்தில் நன்னடத்தையுடன் நடந்து கொண்டால் தண்டனையைத் தளர்த்தல்.
English
Society’s guidelines and established procedures to be considered when deciding how to cope with illegal conduct. Elements of current U.S. criminal justice policy include the right to trial by jury, the right to competent counsel, rights of appeal and habeas corpus, determinant sentencing, probation rather than incarceration for less-serious crimes with no prior conviction, and parole for appropriate conduct during incarceration.