crisis
நெருக்கடி
தமிழ் விளக்கம்
இது அகநிலை உணர்வாகவோ, புறநிலை சமூக நிகழ்வாகவோ இருக்கலாம். சமூகப்பணியாளர்களால் இரு பொருள்பட உபயோகிக்கப்படும் வார்த்தை. 1. மன அலைக்கழிப்பால் ஏற்படும் உணர்வு மாற்றம் மற்றும் மனத் துன்ப நிலை 2. எதிர்பாராத இடர்ப்பாடுகளின் விளைவாக சமூக நிறுவனங்களின் அத்தியாவசியச் செயல்பாடுகள் ஸ்தம்பிக்கும் நிலை. நெருக்கடிகள் மனத் துயரத்தால் ஏற்படும் நிலையென்றால், அதுவே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை வலுவாக்கி, அடைய நினைக்கும் நோக்கத்திற்குத் தடையாக அமைந்து, மன முரண்பாட்டை மேலும் தீவிரப்படுத்தி, சமாளிக்கும் திறனைப் போதாமையாக்கிவிடும். இந்த இயலாமையால் சில நேரங்களில் தன்னிலை அழிந்து சோர்வடையும் நிலை ஏற்படலாம் அல்லது தீடீரென்று தோன்றும் நெருக்கடிகளைச் சமாளிக்கும் புதிய அனுபவ உத்திகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் திறனும், தன்னம்பிக்கையும் வளரலாம்.
English
A term used by social workers in two ways: (1) an internal experience of emotional change and distress and (2) a social event in which a disastrous event disrupts some essential functions of existing social institutions. When seen as a period of emotional distress, it is considered to be precipitated by a perceived life problem or to pose an obstacle to an important goal resulting in internal discord because the individual's typical coping strategies are inadequate. The outcome of the crisis can be positive if the individual eventually finds new coping mechanisms to deal with the unfamiliar event, thus adding to the repertoire of effective adaptive responses.