crisis bargaining

இடர்பாடான காலங்களிலோ, அல்லது நிர்பந்தத்தின் பொருட்டோ, நிலமையைச் சமாளிக்கவோ அல்லது மோதலைத் தவிர்க்கவோ பேசப்படும் பேரம் / நடவடிக்கை

தமிழ் விளக்கம்

மன வேதனையிலிருக்கும் போதோ, நியாயமற்ற வற்புறுத்தலுக்கு இலக்காகும் போதோ, அந்த நிலையிலிருந்து மீளவும் அதைக் குறைக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள். இது கூபர் ராஸ் என்ற உளவியல் மருத்துவரின் மரண நிலைக்கோட்பாட்டில் (தன்னுடைய மரணத்தை எதிர்கொள்ளும் நிலை, தனக்கு நெருக்கமானவரின் மரணத்தை எதிர்கொள்ளும் நிலை) சித்தரித்த ஐந்து வருத்த நிலைகளில் ஒன்றாகும். 1. மறுத்தல் நிலை (எதார்த்ததை உணர மறுத்தல்) 2.ஆத்திர நிலை (எனக்கேன் இந்த நிலை ஏற்பட்டது என்று கருவுதல்) 3.பேரம் பேசும் நிலை (எதையாவது செய்து இந்நிலையிலிருந்து மீளவேண்டும்) என்ற நிலை 4.மனச் சோர்வு நிலை (என்னால் என்ன செய்யமுடியும் என்ற கையறு நிலை) 5. எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளல் (வேறு வழி இல்லை இதை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்ற நிலை) .கூபர் ராஸின் மரணநிலைக் கோட்பாட்டில் சொல்லப்பட்ட ஐந்து வருத்த நிலைகளைப் பற்றிய விளக்கங்கள், நெருக்கடி காலங்களில் மனிதர்கள் நடந்துகொள்ளும் முறையை அறிந்துகொள்ள உதவுகின்றது.

English

Actions taken by people during times of upset or duress to improve the situation or minimize the conflict. The concept is delineated in the Kübler-Ross death stages theory. In this theory, bargaining is the third crisis stage in responses to impending death. After the individual typically goes through a period of denial and then anger, he or she attempts to avoid or delay death by making promises or “deals” or by conforming to different standards.