crisis care centers
நெருக்கடி கால / அவசர கால சேவை மையங்கள்
தமிழ் விளக்கம்
நெருக்கடிக்கு உள்ளான தனி மனிதர்களும் குழுக்களும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை அடைய, தொண்டு நிறுவனங்களும், மருத்துவமனைகளும் நடத்தி வரும் தற்காலிக நிவாரண மையங்கள். இங்கு பேரிடர்களுக்கு உள்ளானவர்களுக்கு நிவாரணமளிப்பது, தற்கொலைத் தடுப்பு, பஞ்சகால நிவாரணம், வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் மற்றும் குழந்தைகளுக்கு அடைக்கலமளிப்பது, போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்பது போன்ற சேவைகளை நெருக்கடி கால / அவசர கால சேவை மையங்கள் செய்து வருகின்றன.
English
Facilities in social agencies and health care organizations oriented toward providing short-term emergency assistance and helping individuals and groups return to precrisis functioning. These centers provide such services as disaster relief, suicide prevention, emergency food and shelter, counseling for victims of rape or other crimes, shelter to victims of spouse abuse or child abuse, detoxification for substance abusers, and many other activities. See also emergency financial assistance.