crisis intervention

நெருக்கடி கால உதவி

தமிழ் விளக்கம்

ஒருவர் தான் எதிர்கொள்ளும் சம்பவத்தைத் தன்னிடமுள்ள அனைத்து வழிமுறைகளாலும் (அனுபவம், ஆதாரங்கள், தொடர்புகள்) கையாளமுடியாமல், தாங்க முடியாத சிரமத்திற்கு உள்ளாகும் நிலையை நெருக்கடி எனலாம். நெருக்கடி என்பது தற்காலிகமானதாக இருந்தாலும் அதனுடைய விளைவுகள் நீண்ட காலத்திற்குத் தொடரலாம். நெருக்கடி நிலை ஒருவரை செயழிலக்கச் செய்து, இணக்கமற்ற நடத்தையை ஊக்குவிக்கும் தன்மையுடையதால், அதைத் தடுத்து நிறுத்தி, அவர்களை நெருக்கடிக்கு முன்னான சமநிலைக்குக் கொண்டுவருதல் முக்கியம். நெருக்கடி கால உதவி என்பது, நெருக்கடிக்கடிக்குள்ளானவர்களுக்கு அதைப் புரிந்து கொள்ள உதவியும், அதைச் சமாளிக்க, எதிர்கொள்ளத் தேவையான திறன்களை வளர்க்கவும் உதவுகிறது.

English

The therapeutic practice used in helping clients in crisis to promote effective coping that can lead to positive growth and change by acknowledging the problem, recognizing its impact, and learning new or more-effective behaviors for coping with similar predictable experiences.