crisis planning
நெருக்கடி காலத்திற்கான/ அவசர காலத்திற்கான திட்டமிடல்
தமிழ் விளக்கம்
ஒரு தனி மனித வாழ்க்கையிலோ, குடும்பத்திலோ அல்லது சமுதாயத்திலோ எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளை எதிர்கொள்ள /சமாளிக்க முறையாகத் திட்டமிடுவதையே நெருக்கடி காலத்திற்கான/ அவசர காலத்திற்கான திட்டமிடல் என்கிறோம். நெருக்கடிகளின் தன்மையைப் பொறுத்து திட்டமிடலின் தன்மையும் இருக்கும். அவசர காலத்திற்கான (மரணம், விபத்து), பேரிடர் காலத்திற்கான மற்றும் நலக்குறைவு (நோய்வாய்ப்படுதல்) காலத்திற்கான திட்டமிடல் என்று இது பலவகைப்படும்
English
Systematic preparation for the inevitable changes that will occur at unpredictable times in the life of an individual or community. Crisis planning ranges from disaster relief planning for communities to helping individuals prepare for deaths or disabilities of family members.