crisis sequence

நெருக்கடி நிகழும் வரிசை

தமிழ் விளக்கம்

பலர் பலவிதமாக இதை வரிசைப்படுத்துகிறார்கள் 1.இடறலாம் தன்மை/ காத்திருக்கும் அபாயம், 2. பாதிக்கப்படக்கூடிய நிலை, 3.பாதிப்பு ஏற்படுதல், 4. பாதிப்பை எதிர்கொண்டு சமாளித்தல், 5. மீளுதல்/ ஏற்றுக்கொள்ளுதல்.
இதில் முதல் இரு நிலைகளை நெருக்கடிக்கு முந்தைய நிலை என்பர். இந்த நிலையைப் புரிந்துகொண்டால் வரவிருக்கும் நெருக்கடிகளின் தாக்கத்தை ஓரளவு சமநிலை இழக்காமல் கையாளமுடியும். இரண்டாவதாக நெருக்கடி நிலை அல்லது பாதிப்புக்கு உள்ளாதல். பாதிப்பு என்பது ஒவ்வொருவருடைய சமாளிக்கும் திறன், அவருக்கிருக்கும் ஆதரவுச் சூழ்நிலை போன்றவற்றால் மாறுபடும். மூன்றாவதாக நெருக்கடிக்குப் பிந்தைய நிலை. இந்த நிலை நெருக்கடியிலிருந்து மீண்டு வர செய்யப்படும் முயற்சிகளைக் குறிக்கும். புதிய திறன்களைக் கற்றுக் கொள்வதன்மூலம் அவர் எதிர்கால நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன் பெறுவர் அல்லது நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் துவண்டு தன்னிடம் உள்ளதெல்லாம் இழக்க நேரிட்டு அதிலிருந்து மீண்டுவர இயலா நிலைக்குத் தள்ளப்படுவர்

English

A series of five predictable changes experienced by the person in crisis: (1) hazardous event (a stressor that may be a single catastrophic event or a series of mishaps that have a cumulative effect), (2) vulnerable state (heightened tension and anxiety caused by the hazardous event, intensified as the individual uses the entire repertoire of coping techniques before seeing that they do not work in this new situation), (3) precipitating factor (the “last straw,” often seen as the presenting problem or event that brings tension to a peak), (4) active crisis state (disequilibrium has set in and is manifested by psychological and physical turmoil, aimless activity, disturbances in mood and intellectual functioning, and painful preoccupation with events leading to the crisis event), and (5) reintegration (the individual adjusts or accepts and learns new and effective coping techniques, a phase that may be adaptive or maladaptive). See also coping index.