cross-racial treatment

மாற்று இனத்தவரால் கொடுக்கப்படும் சிகிச்சை

தமிழ் விளக்கம்

இதனுடைய பலாபலன்கள் பற்றி சமூகப்பணியாளரிடையே பல்வேறு கருத்துக்கள் உள்ளன. லேரி இ டேவிஸ் மற்றும் ஜோ ஜெல்ஸோமினோ இதிலிருக்கும் பிரச்சனைகளைக் கீழ்க்கண்டவாறு பட்டியலிடுகிறார்கள். 1. இன உணர்வு இருவரிடத்திலும் (சமூகப்பணியாளர் மற்றும் வாடிக்கையாளர்) இருக்கலாம். 2. இன உணர்வு சமூகப்பணியாளர் - வாடிக்கையாளரின் ஒத்துணர்வுக்கு / மனத்தொடர்புக்கு தடையாய் இருக்கலாம். 3. அவர்களுடைய உதவி பொருத்தமற்றதாய் அமையலாம். 4. தன்னுடைய இனக்குழுக்களின் பழக்க வழக்கங்களைச் சமூகப்பணியாளரால் புரிந்துகொள்ள முடியவில்லையென்று வாடிக்கையாளர் நினைக்கலாம். 5. சமூகப்பணியாளர் வேற்று இனத்தவராக இருப்பதால் அவரிடம் சில சாமர்த்தியங்கள் இருக்காது என்று வாடிக்கையாளர் நினைக்கலாம்.

English

Intervention by a professional who is of a different racial background than the client. Social workers debate whether this can be as effective as interventions within racial and ethnic boundaries but existing empirical studies, rather than advocacy statements, are inconclusive. According to Larry E. Davis and Joe Gelsomino (“An Assessment of Practitioner Cross-Racial Treatment Experiences,” Social Work, 39[January 1994], pp. 116–123), there are five potential problem areas: (1) racism may exist, (2) worker–client rapport may not exist, (3) the intervention may be inappropriate, (4) clients may believe the worker lacks understanding about the relevant racial group, and (5) clients may believe workers lack sufficient skills because of their race.