crystallized intelligence

திட்டவட்டமான, துல்லியமான, நிரந்தர வடிவம் பெற்ற நுண்ணறிவு. அனுபவ ஞானம்

தமிழ் விளக்கம்

இது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கிடைக்கிறது. வயதாக வயதாக இந்த நுண்ணறிவு வலுப்பெறும். சமூகமயமாதலிலிருந்தோ, கலாச்சாரத் தொடர்புகளினாலோ, பிறவகையில் பெறப்பட்ட தகவல்களாலோ ஒரு மனிதானுக்கு மன முதிர்ச்சி மற்றும் ஆற்றலைத் தந்து அதைப் பொருத்தமான இடத்தில் பொருத்தமான முறையில் உபயோகிக்கும் திறனைத் தரும் நுண்ணறிவு. இதை அனுபவ ஞானம் எனலாம். வயதாக வயதாக இந்த நுண்ணறிவு திடப்படும் / பெருகும் தன்மை கொண்டது. இதற்கு மாறாக கலாச்சாரத் தொடர்பில்லாத, பிரச்சனைகளைத் தீர்க்கும் திடமற்ற / நீர்ம நுண்ணறிவு, வயதாக வயதாகக் குறையும். இது ஏட்டுப்படிப்பினாலும், நினைவுத்திறனாலும் வருவது.

English

The mental skills and abilities accumulated through socialization, cultural contact, and other aquired information, and the ability to use these skills appropriately and effectively. Unlike fluid intelligence (nonculturally related problem-solving abilities), which is thought to decline in later adulthood, crystallized intelligence continues to increase with age as experience and exposure to new knowledge accumulates. See also multiple intelligences.