CSWE
சமூகப் பணிக்கல்விக்கான குழு
தமிழ் விளக்கம்
சமூகப்பணிக் கல்விக்கான குழு என்பது, சமூகப்பணிக் கல்வியின் தர அளவுகளை நிர்ணயிக்கவும், அதை நிலைநிறுத்தவும் சமூகப்பணிக் கல்வியாளர்கள், சமூகப்பணி தொழில்சார்ந்த அமைப்புகள், சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் சமூகப்பணி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் அடங்கிய ஒரு சுதந்திர அமைப்பு. இதன் முன்னோடி அமைப்புகளான, 1919 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட CSWE அமைப்பும், 1936 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சமூகப்பணிக் கல்வி நிறுவனங்களின் தேசிய அமைப்பும் (National Association of Schools of Social Administration - NASSA) இணைக்கப்பட்டு, 1952 ஆம் ஆண்டு தற்போதைய அமைப்பான சமூகப்பணிக் கல்விக்கான குழு (Council on Social Work Education (CSWE) உருவாக்கப்பட்டது. சமூகப்பணி பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் வருடாந்திர மாநாடு நடத்துவது, சமூகப்பணி பற்றிய புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் வெளியிடுவது மற்றும் சமூகப் பணிக்கான பத்திரிக்கை ஒன்றையும் நடத்துகிறது.
English
See Council on Social Work Education (CSWE).