cult
வழிபாட்டு மரபு, சமயக் கோட்பாட்டுமுறை, சமய மரபு, வெறி ஈடுபாடு, பற்றீடுபாடு
தமிழ் விளக்கம்
இது சாதாரண விளையாட்டு / பொழுதுபோக்கு ஆர்வமுள்ள குழுக்கள் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட தலைவரையோ அல்லது மத குருவையோ வழிபடும் ஆளுமை வழிபாட்டுக் குழுக்கள், ஆபத்தான, இன/மத / வர்க்க வெறுப்பைத் தூண்டும் குழுக்கள் என்று பலவற்றைக் குறிக்கும் சொல். இக்குழுக்கள் தங்களால் வரிக்கப்ப்ட்ட தலைவர்களின் போதனையில் அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பர். தங்களுடைய நம்பிக்கைகள், நடைமுறைகள் மறை ஞானம் பெற்றதாயும், தெய்வ சக்தி கொண்டதாயும், வியத்தகு விளைவுகளைத் தோற்றுவிக்கும் ஆற்றல் (மந்திர சக்தி) கொண்டதாயும் நம்புவர். இக்குழுவினர் பொது நம்பிக்கைகளிலிருந்து மாறுபட்ட, புதுமையான நம்பிக்கை மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவதாகக் கருதுவர். இருப்பினும் cult என்ற வார்த்தையால் தாங்கள் குறிக்கப்படுவதை ஆட்சேபிப்பர். அது ஏளனத்திற்குரிய வார்த்தையாகப் பொருள் கொள்ளப்படுவதாலும், பிறர் தங்களை வெறுக்கவும் விலக்கவும் அந்த வார்த்தை வழிவகுப்பதாலும் ஆட்சேபணை தெரிவிப்பர்.
English
1. A group whose members hold strong beliefs associated with the teachings of a leader. 2. A body of beliefs and rites practiced by a group that usually attributes religious, mystical, or magical powers to its leader.