cultural deprivation

கலாச்சார வறுமை / கலாச்சார இழப்பு, கலாச்சார மூலதன வறுமை, தனி மனிதரிடமோ, சமூகக் குழுவிடமோ வழக்கமான சமூக நடைமுறைகளோ, நன்னெறிகளோ இல்லாதது.

தமிழ் விளக்கம்

சமூக அந்தஸ்தில் மேலேறிச் செல்லும்படியாகவும், சமூகச் சூழல்களைத் (சமூக மாற்றங்களை) திறம்பட எதிர்கொள்ளும்படியான தன்முனைப்பாற்றல் வழங்கக்கூடிய கலாச்சார மூலதனம் (சமூகமயமாகும், தரமான கல்வி பெரும், சமூக மதிப்பீடுகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள்) சிலருக்கு கிடைக்காமல் இருக்கும் நிலையைக் கலாச்சார இழப்பு அல்லது சமூக மூலதன வறுமை என்கின்றனர். தனிமனிதர்கள் மற்றும் குழுக்களுக்கு, அவர்களைச் சார்ந்த சமூகம் மிகக் குறைந்த அளவில் தார்மீக வழிகாட்டுதல்களை வழங்குவதை இச்சொல் குறிக்கிறது.

English

The absence of certain socialization experiences that an individual may need to cope effectively in new social situations. One who has been deprived in this way often lacks the social skills, values, or motivations necessary to deal with the relevant environment. See also anomie.