cultural pluralism

கலாச்சார / பண்பாட்டு பன்முகத்தன்மை

தமிழ் விளக்கம்

மாறுபட்ட மதிப்பீடுகளையும், வாழ்க்கை முறைகளையும் கொண்ட வெவ்வேறு இன, மத, கலாச்சார அடையாளங்களைக் கொண்ட சிறு சமூகங்கள், தங்களின் அடையாளங்களைத் தக்கவைத்துக் கொண்டும், அதே நேரத்தில் அவர்கள் வாழும் பெரும் சமூகத்தின் நடைமுறைகளைத் தழுவியும் வாழும் நிலையைக் கலாச்சாரப் பன்முகத்தன்மை (cultural pluralism) என்பர். பல்கலாச்சாரச் (Multiculturalism) சமூகம் என்பது ஒவ்வொரு கலாச்சாரக் குழுவினரும் தனித்த அடையாளங்களுடன் பொதுக்கலாச்சாரத்தை உருவாக்க முடியா நிலையைக் குறிப்பது.

English

The existence within a society of various racial, religious, and ethnic groups, as well as other distinct groups, each of which have different values and lifestyles.