culturally biased tests
கலாச்சாரச் சார்புள்ள சோதனைகள்
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட முயற்சியில் / சோதனையில் ஒரு மனிதரின் நுண்ணறிவு, உளச்சார்பு, அதில் வெற்றியடைய உள்ள வாய்ப்புக்களை அறிய உதவும் சோதனை முறைகள். எல்லாக் கலாச்சாரத்திற்கும் அனுகூலமாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலாச்சாரத்திற்கு மட்டும் அனுகூலமாக / பொருத்தமுடையாதாக அமைந்திருக்கும் சோதனை முறைகளைக் கலாச்சார, ஒருதலைச் சார்புள்ள சோதனை முறைகள் எனலாம். ஒரு கலாச்சாரத்துடன் பரிச்சயமில்லாத, மாற்றுக் கலாச்சாரப் பின்னணி கொண்டவர்கள், அத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் தரத்தை எட்டமுடியாதபோது, அவர்களுக்குக் குறைவான வாய்ப்புகளே வழங்கப்படுகின்றன.
English
Examinations designed to determine an individual's intelligence, aptitude, or anticipated success in a given endeavor but that are inherently disadvantageous to members of some groups. For example, a test item asks something about European history, a disadvantage to children from Asian backgrounds. An effect of such tests is to justify placement of culturally disadvantaged people into limited opportunity situations.