culture

கலாச்சாரம்

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகம், தனது பழக்க வழக்கங்கள், திறன்கள், தொழில்நுட்பம், கலை, சித்தாந்தம், அறிவியல், சமயம், அரசியல், நடத்தை போன்றவற்றில் வெளிப்படுத்தும் இயல்புகள். வேளாண்மையில் முதலில் பயன்படுத்தப்பட்ட இச் சொல்லானது மானுடவியலில் பயன்பட்டபோது, மனிதர்களைக் கல்வியின் மூலமும் பயிற்சிகளின் மூலமும் வளர்த்தெடுத்தல் (செம்மைப்படுத்தல்) என்ற பொருளைத் தந்தது. கலாச்சாரம் என்பது பலவற்றையும் உள்ளடக்கியதால் அதை எளிமையான விளக்கமுடியாது. ஒரு நிலையில் கலாச்சாரம் என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு விலாசம், வாழ்வியல் வழிமுறைகள், சமூகக் கட்டமைப்பு போன்றவற்றைச் சுட்டி நிற்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில்சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் கலாச்சாரத்திற்குள் அடங்கும்.. கலாச்சாரம் என்பது உயிரியல் பரம்பரையால் வருவதல்லவென்றும், அது ஒரு குறிப்பிட்ட சமூகம் தொடர் கற்றலின் மூலம் கடைப்பிடிக்கும் வழிமுறைகளென்றும் கொள்ளலாம். கலாச்சாரம் என்பதில் அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்ட, தலைமுறை தலைமுறையாகப் படிந்த அறிவு, அனுபவம், நம்பிக்கைகள், மதிப்பீடுகள், அர்த்தங்கள், கடமைகள், பிரபஞ்ச அறிவு, மதம் ஓவியம், இசை போன்று குறியீடுசார் கலாச்சாரமும், கருவிகள், இயந்திரங்கள், கலை வடிவங்கள் (கட்டிடம், சிற்பம், சமையல்), தொழில் செய்முறைகள் போன்ற பொருள்சார் கலாச்சாரமும் அடங்கும். கலாச்சாரம் என்பதை ஒரு இனத்தின் அடையாளம் என்று சுட்டுவோரும் உள்ளனர்.

English

The customs, habits, skills, technology, arts, values, ideology, science, and religious and political behavior of a group of people in a specific time period.