culture of poverty

ஏழ்மை உருவாக்கும் கலாச்சாரம், ஏழ்மை உருவாக்கும் பண்பாட்டு விளைவு

தமிழ் விளக்கம்

ஏழைகளால் உணரப்படும் கையறு நிலை, பிறரைச் சார்ந்திருக்கவேண்டிய நிலை, பிறரால் ஓரங்கட்டப்பட்டதாக / புறக்கணிக்கப்பட்டதாக உணரும் நிலை, அதிகாரமற்ற நிலை, அவர்களிடையே சில குணாதிசயங்களை உருவாக்கி, அவர்களுக்கென்று ஒரு தனிக் கலாச்சாரத்தையோ, பொதுக்கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட தனிக்கலாச்சாரத்தையோ உருவாக்கிவிடுகிறது. அவர்களின் இந்தக் கலாச்சாரம் சில மதிப்பீடுகளையும், நெறிமுறைகளையும் உருவாக்கி, அவர்களின் செயல்நோக்கம் / தன்முனைப்பாற்றல் / இயக்குவலுவைச் (motivation) சிதைப்பதால், சமூகத்தில் கிடைக்கும் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியாமலாகி, அவர்களை ஏழ்மையிலிருந்து மீண்டெழ முடியாமல் எப்போதும் வறியநிலையில் வைத்திருக்கின்றது என்று மானுடவியலார் ஆஸ்கர் லீவிஸ் சொன்ன கருதுகோள்.

English

A premise according to which poor people are impoverished because their values, norms, and motivations prevent them from taking advantage of widespread opportunities to achieve economic independence.