culture shock
பரிச்சயமற்ற வாழ்க்கை முறைக்கோ, கலாச்சாரத்திற்கோ அறிமுகமாகும்போது உண்டாகும் அதிர்ச்சி / மன அழுத்தம் / இலக்கற்ற தன்மை
தமிழ் விளக்கம்
இடப் பெயர்வாலோ, சுற்றுலா நிமித்தமாகவோ தமக்குப் பரிச்சயமில்லாத மாற்றுக் கலாச்சாரச் சூழ்நிலையை, வாழ்க்கை முறைகளை எதிர்கொள்ளும் போது, புதிய மொழி, புதிய தகவல்கள், புதிய தொழில்நுட்பம், மாறுபட்ட செய்திறன்களால் ஒருவருக்கு ஏற்படும் மனக்குழப்பம், திகைப்பு (disorientation) போன்ற உணர்வுகள் குறிப்பிட்ட நாட்களுக்கும் மேல் நீடிக்கும் போது அதைக் கலாச்சார அதிர்ச்சி என்று குறிக்கின்றார்கள்.
English
The experience of temporary confusion, depression, and anxiety when an individual enters another cultural or subculture group environment and is uncertain about the expected roles and norms. When these symptoms become chronic, the problems are called disorders of change. See also anomie.