Current Procedural Terminology (CPT)
தற்போதைய நடைமுறை சொல், செயற்படுமுறைக்கான வழக்குச் சொல்
தமிழ் விளக்கம்
அமெரிக்க மருத்துவக் கழகத்தால் மருத்துவர்களின் நடைமுறைகள், செயல்முறைகளை ஒரே மாதிரியான பொருளில் புரிந்துகொள்ள உருவாக்கப்பட்ட காப்புரிமை பெற்ற குறியீட்டுச் சொற்கள். மருத்துவம், அறுவைச் சிகிச்சை, நோய்கண்டறிதல் சேவைகளில் மருத்துவர்கள், குறியீடு தொகுப்பாளர்கள், நோயாளிகள், மருத்துவ சேவைகளுக்கானா தர மதிப்பீட்டாளர்கள், மருத்துவப் பணிகளுக்கான நிர்வாகத்தினர், நிதி மேலாண்மையினர் மற்றும் பகுப்பாய்வு செய்பவர்கள் போன்ற அனைவரும் ஒரே பொருளில் புரிந்துகொள்வதற்கான சொற்கோவை. 1966 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த குறியீட்டு சொல் வழக்கம் ஆண்டுதோறும் இதற்கென நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் பரிசீலிக்கப்பட்டுத் திருத்தம் செய்யப்படுகின்றது. பொது மருத்துவத்திற்கான சொற்கள் போன்று மனநோய்க்கென தனி குறியீட்டுச் சொற்களும் (Procedural Terminology for Psychiatrists (PTP) வழக்கத்தில் உள்ளன. மருத்துவப் பணியில் இல்லாத வேறு எவரும் இந்தச் சொற்களைத் தங்களுடைய அறிக்கையிலோ, சேவைகளிலோ பயன்படுத்தலாகாது என்ற நெறிமுறையும் உள்ளது.
English
A physician’s manual that systematically lists and codes the services and procedures performed by physicians. CPT, first published in 1966, is periodically revised. The part of CPT that lists and codes the services and procedures commonly used by psychiatrists is also published separately as Procedural Terminology for Psychiatrists (PTP). CPT or PTP codes do not include, and should not be used to report, services of nonphysicians.