cutback strategies

(சேவைகளை / நிதி ஆதாரங்களை) குறைப்பதற்கான உத்திகள்

தமிழ் விளக்கம்

சமூகநலத் திட்டங்கள் சரியாகச் செயல்படுத்த முடியாத நிலையில், அதன் நோக்கத்தை அடையமுடியா நிலை ஏற்படும்போதோ, நிதிப்பற்றாக்குறை காரணமாகவோ, புதிய முன்னுரிமைகளுக்கு இடம் கொடுக்கவேண்டுமென்றாலோ, அமுலிலிருக்கும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைப்பதற்காகக் கையாளப்படும் பல்வேறு உத்திகள். இந்த உத்திகள் சேவைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, பணியாளர்களின் பணிச் சுமையை அதிகரித்து பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, அதே பணிகளுக்கு குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பது, சேவைகளைச் சட்டென்று பெறமுடியாமல் தாமதப்படுத்துவது, பிற நிறுவனங்களுடன் செலவினங்களைப் பகிர்ந்துகொள்வது, பிற நிறுவனங்களுடன் இணைந்து கொள்வது போன்றவை அடங்கும்.

English

In social welfare administration, the planned activities for reducing or eliminating programs, which are necessitated by financial constraints, new priorities, ineffectiveness of programs, or achievement of goals. These activities include instituting administrative and labor efficiencies (through increased workloads, reduced support services, contracting out services and hiring lower-paid workers), reducing services (by eliminating programs and reducing the accessibility of service), and cost sharing and mergers with other organizations.