CVA
பெருமூளை இரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்பு, பெருமூளைக்கு இரத்தம் எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களில் ஏற்படும் விபத்து / எதிர்பாராத நிகழ்வு, பாரிசவாதம், பக்கவாதம்
தமிழ் விளக்கம்
சாதாரணமாகப் பக்கவாதம் அல்லது பாரீசவாதம் (stroke) என்றழைக்கப்படும் நோயின் மருத்துவப்பெயர். பக்கவாதம் அல்லது பாரிசவாதம் (stroke) என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின் செயற்பாடுகள் மிகவிரைவாக இழக்கப்படுவதைக் குறிக்கும். குருதி உறைதல், குழலியக்குருதியுறைமை போன்றவற்றால் அல்லது குருதிப்பெருக்கினால் குருதி வழங்கல் குறைவடையும்போது இது நிகழக்கூடும். மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறையும்போது, மூளையின் உயிரணுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும், பிராண வாயுவும் கிடைக்காமல் போவதினால், பாதிக்கப்படும் மூளையின் பகுதி செயற்பட முடியாமல் போய், உடலின் ஒரு பக்கத்திலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்கள் இயங்க முடியாமல் போகிறது. அத்துடன், புரிந்துகொள்ள முடியாமை, ஒழுங்காகப் பேசமுடியாமை, பார்வைப் புலத்தின் ஒரு பகுதியைப் பார்க்க முடியாதிருத்தல் போன்றவையும் ஏற்படலாம்.
English
Cerebrovascular accident. See stroke.