CWEP
சமுதாயப் பணியில் அனுபவம் பெறுவதற்கான திட்டம்
தமிழ் விளக்கம்
இந்தத் திட்டத்தின்படி, ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் உதவி பெரும் திட்டப் பயனாளிகள், நிரந்தரமாக நலத்திட்ட உதவிகளைச் சார்ந்திராமல், அவர்களுக்குப் பணி / தொழில் செய்யும் திறனை வளர்க்கும் அனுபவத்தை உருவாக்க வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது. இதன்படி பயனாளிகள் பெரும் உதவியின் அளவைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட மணி நேரம் அரசு அல்லது தொண்டு நிறுவனங்களில் பணிப்பயிற்சி பெற வேண்டும். பணியில் காலம் தவறாமை, சக பணியாளர்களிடம் நல்லுறவு, வாடிக்கையாளர்களுடன் சுமுகமாகத் தொடர்பு கொள்ளல் போன்றவற்றில் திறனை வளர்த்து, தாங்களும் வேலை செய்து, வருமானமீட்டவேண்டுமென்ற ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் பெறுவதற்கு இந்தப் பயிற்சி உதவுகிறது.
English
See Community Work Experience Program (CWEP).