database

முறையாகத் தொகுக்கப்பட்ட தகவல் தொகுப்பு, தரவு தளம்

தமிழ் விளக்கம்

தரவு என்பது தெளிவான ஆனால் அரத்தமற்ற மற்றும் ஒழுங்கற்ற விடயங்களாகும். இதனைக் கொண்டு எந்த விதமான தீர்மானத்திற்கோ அல்லது முடிவிற்கோ வரமுடியாது. தரவுதளம் என்பது தொகுக்கப்பட்ட தரவுகள் ஆகும். நிறைய தரவுகளைச் சேகரித்து, தொகுத்து, பாதுகாத்து, பயன்படுத்துவதற்காகவே தரவு தளங்கள் உருவாக்கப்படுகிறது. தரவு தளங்களில் உள்ள தரவுகளை பயனர்கள் பயன்படுத்துவதற்கு உதவுவது தரவு தளம் மேலாண்மை மென்பொருட்களும், அதைச் சார்ந்த உதவி மென்பொருட்களுமாகும். தரவுகளுக்கும் பயனர்களுக்கும் இடையிலிருந்து, ஒரு முடிவினை எடுக்கவும், தீர்மானத்திற்கு உதவவும், தரவு தள மேலாண்மை மென்பொருள் பயனர்களுக்கு உதவியாக ஒரு எளிமையான முகப்பைக் கொடுக்கிறது.

English

A large pool of organized information available to users of on-line computer systems. Because each user seeks only portions of the data, the computer program extracts only that data sought. For example, a social agency might request from the NASW on-line system information about all the articles published on the topic of AIDS in the past three years. See also computerized databases.