date rape

(dating சந்திப்பு) அறிமுகமானவர்களிடம் அத்துமீறுதல் / வன்புணர்ச்சி

தமிழ் விளக்கம்

பரஸ்பரம் அறிமுகமுள்ள ஆணும் பெண்ணும் தங்களுடைய நட்பையும் புரிதலையும் ஆழமாக்கிக்கொள்ள சந்திக்கும் நிகழ்ச்சியை dating என்கின்றனர். இந்த சந்திப்பில் காதலுறவு இருக்கலாம். ஆனால் மனமொப்பா பாலியல் வன்முறை கூடாது என்பதே இந்தச் சந்திப்பின் நியதிகளில் ஒன்று. அதையும் மீறி, சந்திக்கும் இருவரில் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவது date rape எனப்படுகிறது. இது அறிமுகவானவர்களிடம் அத்துமீறல் (acquaintance rape) என்ற நடத்தையில் அடங்கும். அறிமுகமானவர்களிடம் அத்துமீறுதல் என்பது காதலுணர்வு இல்லாதவரிடம், முன்னர் பாலுறவு கொள்ளாதவர்களிடம் அத்துமீறும் நடத்தையாகும். உடனிருக்கும் போது அத்துமீறும் நடத்தைகள் பெரும்பாலும், இளைஞர்களிடத்தில், குறிப்பாக கல்லூரி காலத்தில் நடைபெறுகின்றது.
பாலியல் வன்முறை எனப்படுவது பாலியல் வன்புணர்வு, பாலியல் நோக்குடன அடிமைப்படுத்துதல், கட்டாயப் பாலியல் தொழில், வலிந்து கர்ப்பமாக்குதல், கட்டாய இனவிருத்தியை மேற்கொள்ளல், பாலியல் சார்ந்த கேலி, மிரட்டல், கட்டாயக் கருக்கலைப்பு என பல வகைக் குற்றங்கள் அடங்கும். ஒரு பெண் அல்லது ஆண் குடும்பம் விரும்பாத ஒருவருடன் காதல் அல்லது உடலுறவு கொண்டார் என்பதற்காக வன்முறைக்கு உட்படுத்துவதையும் ஒரு வகை பாலியல் வன்முறையே.

English

See acquaintance rape.