day care
பகல்நேரப் பராமரிப்பு
தமிழ் விளக்கம்
பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் அருகில் இல்லாதபோது, அவர்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகள் அல்லது பராமரிப்பு தேவைப்படும் பிறருக்குப் பகல் நேரக் கவனிப்பு தரும் நடைமுறைகளும் வசதிகளும் இதிலடங்கும். முதியோர்களுக்கான, மன நலம் குன்றியவர்களுக்கான பகல்நேரப் பராமரிப்பு, நோயாளிகளுக்கான பகல்நேர மருத்துவ மனைகள், சமூக உறவாடலுக்கான பகல் நேர மையங்கள் என்று இரவில் தங்கள் வீடு திரும்ப வாய்ப்புள்ள எல்லா வயதினருக்கும், எல்லாத் தேவையினருக்கும் செய்து தரப்படும் சேவைகளும் இந்தப் பொருளிலே கையாளப்படுகின்றன.
English
Facilities and programs that care for children or other dependents when their parents or guardians are unavailable for their care. The term also applies to physical and health care programs for people of all ages who return to their homes each evening. These facilities include adult day care, day hospitals, medical day care, mental health day care, and social adult day care.