DDS

இயலாமை, ஆற்றல்கேடு, செயலூக்கத் தடங்கலான குறைபாடு, உடல் ஊனம், அங்கவீனம் ஊனத்தின் அளவைக் கண்டறியும் சேவை

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் ஊனமுற்றோருக்கான நலத்திட்ட பயன்களைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்களின் ஊனத்தின் தன்மையைப் பரிசீலித்துத் தேர்வு செய்யும் முறை. ஊனத்தின் தன்மையைத் தீர்மானிக்கும் சேவைகள் என்பது (Disability Determination Services), மத்திய அரசின் நிதிஉதவியுடன் மாநிலங்களில் செயல்படும் அலுவலகங்கள். ஊனமுற்றோருக்கான சமூகப் பாதுகாப்புக் காப்பீடு (Social Security Disability Insurance (SSDI) மற்றும் ஊனமுற்றோருக்கான வருமான உத்தரவாதத் (Supplemental Security Income (SSI) திட்டங்களுக்கான விண்ணப்பங்களை அதற்கான கள அலுவலகங்கள் பரிசீலித்து, அதை ஊனத்தின் தன்மையைத் தீர்மானிக்கும் இந்த மாநில அலுவலகத்திற்குப் பரிந்துரை செய்யும். மாநில அலுவலகங்கள் அந்த விண்ணப்பங்களை ஊனத்தின் தன்மையைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ செய்யலாம். அதன பின் விண்ணப்பங்கள் மேல் நடவடிக்கைகளுக்காகக் கள அலுவலகத்திற்கு அனுப்பபட்டு உதவிகள் வழங்கப்படும்.

English

See Disability Determination Service (DDS).