de Paul,
வின்சென்ட் தே பவுல் (1581–1660)
தமிழ் விளக்கம்
புனித வின்சென்ட் தே பவுல் கத்தோலிக்கத் திருச்சபையில் வாழ்ந்த, ஏழைகளுக்குத் தொண்டு செய்யத் தன்னையே அர்ப்பணித்த ஒரு குரு ஆவார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையிலும், ஆங்கிலிக்க ஒன்றியத்திலும் புனிதராகப் போற்றப்படுகிறார். இவருக்கு 1737ல் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. தொண்டாற்றும் மகள்கள் ( Daughters of Charity of Saint Vincent de Paul) என்ற சபையை ஏற்படுத்தி, ஏழைகளுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். வின்சென்ட் தே பவுல் இறந்த 52 ஆண்டுகளுக்கு பிறகு, 1712 இல் முதன்முறை அவரது கல்லறை தோண்டப்பட்டபோது, அவருடைய உடல் முழுவதும் அழியாமல் இருந்தது. ஆனால் 1737 இல் புனிதர் பட்டத்திற்காக இவரது கல்லறை மீண்டும் தோண்டப்பட்டபோது, சில எலும்புகளும் இதயமும் மட்டுமே அழியாமல் கிடைத்தன. பாரிசில் வின்சென்ட்டியர்களின் தலைமையகச் சிற்றாலயத்தில் உள்ள புனித வின்சென்ட் தே பவுலின் மெழுகு உருவத்தின் உள்ளே அவரது எலும்புகள் வைக்கப்பட்டுள்ளன. பாரிசில் உள்ள 'பிறரன்புப் புதல்வி'களின் தலைமை இல்லத்தில் இருக்கும் திருப்பண்டப் பேழையில் வின்சென்ட் தே பவுலின் இதயம் வைக்கப்பட்டுள்ளது.
English
Vincent (1581–1660)Catholic priest and advocate for the poor people of France, he established seminaries, and poor relief organizations including the Daughters of Charity to provide relief and assistance to the needy. He was canonized in 1737. See also Ozanum, Antoine Frederic.