DEA

போதைப் பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவு

தமிழ் விளக்கம்

அமெரிக்க நீதித் துறையின் கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவு, அமெரிக்காவில் போதை மருந்துகளின் பயன்பாடு, போதைப் பொருள் கடத்தல் போன்ற செயல்களைக் கண்காணிக்க, கட்டுப்படுத்த அதிகாரமுள்ள நிறுவனம். இது அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புடனும் (FBI), குடியேற்றம் மற்றும் சுங்கத் துறையுடனும் இணைந்து செயல்படுகிறது. போதை மருந்துப் பொருள்களின் பரிவர்த்தனையைக் கண்காணிப்பதில் அமெரிக்க நாட்டிற்குள் மட்டுமல்ல, தேவைப்படின் அயல்நாடுகளிலும் புலனாய்வை மேற்கொள்ளும் அதிகாரம் படைத்தது.

English

See Drug Enforcement Administration, U.S. (DEA).