decentralization

அதிகாரப் பரவலாக்கம்

தமிழ் விளக்கம்

ஒரு செயல் செய்யப்படுமிடத்திற்கு அருகாமையிலோ அல்லது ஒரு பிரச்சனை கையாளப்படுமிடத்திற்கு அருகாமையிலோ அதைக் கையாளத் தேவையான காரியப் பொறுப்புகளைப் (மனித வளம், திட்டமிடல், நிதி ஒதுக்கீடு, அமலாக்கம்) பகிர்ந்து கொள்ளுதல். இது மையப்படுத்தல் அல்லது ஓரிடத்தில் அதிகாரம் குவித்தலுக்கு மாற்றானது. இது அரசு நிர்வாகம்ம், தனியார் துறை நிர்வாகம், நீதி நிர்வாகம், பொருளாதார நிர்வாகம், தொழில்நுட்ப நிர்வாகம் போன்ற துறைகளிலும் பயன்படும் வார்த்தை. காந்தியடிகள் அதிகாரப் பரவல் முறையை கிராமங்களுக்கான சுயராஜ்யம் என்றார். இந்தியாவின் பஞ்சாயத்து அமைப்பை அதிகாரப் பரவலுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

English

Diffusion of responsibility, planning, and implementation of change from the highest levels of an organization's authority toward those closer to the problem or area of action. An example is the federal government's revenue sharing with states and municipalities.