declassification
வகைபடுத்துதலிலிருந்து விலக்குதல், ரகசியத் தொகுப்பிலிருந்து நீக்குதல்
தமிழ் விளக்கம்
1. பணியாளர்களுக்கான ஊதியப் பளுவை குறைக்க நினைக்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், பணியாளர் தேர்வுக்கு வைத்திருக்கும் தகுதி வரையறைகளைக் குறைத்து அல்லது இல்லாமலாக்கி அந்தப் பணிக்கு குறைவான தகுதிகொண்ட, குறைந்த ஊதியத்தில் பணியாற்ற பணியாளரைத் தேர்வுசெய்யும் நடைமுறை. உதாரணமாக சமூக சேவை நிறுவனங்கள் ஒரு பணிக்கு சமூகப்பணியில் முதுகலைப் பட்டதாரியை (MSW) தகுதியாகக் கொண்ட நடைமுறையை மாற்றி அந்தப் பணியை அதைவிடக் குறைந்த தகுதி படைத்தவராலும் செய்யமுடியும் என்று மாற்றிக்கொள்ளுதல்.
2. பல அரசு ஆவணங்களின் உள்ளடக்கம் பல்வேறு சட்ட விதிமுறைகளின்படி எல்லோராலும் அணுக முடியாத ரகசியத் தன்மை கொண்டது. விதி விலக்கற்று கையாளப்பட்ட இந்த நடைமுறையால், அரசின் நடவடிக்கைகளை பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று மதிப்பீடு செய்ய இயலாத நிலையில், நிர்வாகத் தவறுகள் அதிகரித்தன. அதைப் போக்க ஒரு சில செயல்பாடுகளைத் தவிர பிற செயல்பாடுகள் பற்றிய ஆவனங்கள் இந்த இரகசியக் காப்பு வகைப்படுத்துதலிருந்து நீக்கப்பட்டடு, அது எல்லோருக்கும் தெரியும் வண்ணம் தளர்த்தப்பட்டது.

English
A personnel policy used by public and private employers, often as a means of reducing personnel expenditures, to eliminate educational and experience requirements for holding a job and performing its functions. For example, some professional social work positions were declassified when agencies no longer required that specific jobs had to be done only by social workers with MSW degrees.