deductive reasoning

ஊகிக்கும் முறை, உய்த்துணரும் முறை, பகுத்தறியும் முறை, உய்த்தறி நியாயம் கூறல், பகுப்புவழி பகுத்தறிதல்

தமிழ் விளக்கம்

பகுப்புவழி பகுத்தறிதல் அல்லது பகுப்புவழி ஏரணம் (deductive logic) என்பது பொது உண்மைகளாக முன்வைக்கப்படும் மேற்கோள்களில் இருந்து, குறிப்பிட்ட முடிவுகளைக் கட்டமைத்தல் அல்லது மதிப்பீடு செய்தல் ஆகும். பகுப்புவழி வாதங்கள் மேற்கோள்களில் இருந்து முடிவுகள் கட்டாயம் நிகழ்கின்றன என்பதைக் காண்பிக்க முயற்சி செய்வனவாகும். மேற்கோள் 1: எல்லா மனிதர்களும் இறப்பார்கள். மேற்கோள் 2: குமரன் ஒரு மனிதன். முடிவு: குமரன் இறப்பான். பகுப்பு வழிப் பகுத்தறிதல் என்பது பொது உண்மைகளைப் பல கூறுகளாகப் பிரித்து, ஒவ்வொரு கூற்றிலிருந்தும் பொது உண்மையை நிலைநாட்டுதல். இது பொது உண்மை (கோட்பாடு Theory). அனுமானம் (கருதுகோள் Hypothesis), அனுமானத்தைச் சோதித்தல் (கண்காணிப்பு observation) உறுதிப்படுத்தல் (confrimation) என்று தொடரும்.
இதற்கு மாறானது தொகுப்புவழிப் பகுத்தறிதல் அல்லது தொகுப்புவழித் தர்க்கம் என்பது குறிப்பிட்ட கூறுகளை கூர்ந்து நோக்குவதால் (observation) அது காட்டும் தன்மையிலிருந்து (pattern) அனுமானங்களை உருவாக்கி அதை சோதித்தறிந்து (Testing Hypothesis) அதன் மூலம் பொதுவான முடிவுகளை அல்லது உண்மைகளை (Theory) முன்வைத்தல் ஆகும். மேற்கோள்களுக்கும் முடிவுகளுக்குக்கும் இடையே உள்ள இடைவெளியை தொகுப்பு வழிச் சிக்கல் அல்லது தொகுப்புவழிப் பிரச்சினை என்பர். இந்த இடைவெளி புதிய சிந்தனைகள், எண்ணக்கருக்கள் பிறக்க வழிசெய்கிறது.

English

The process by which particular conclusions are reached by starting with general principles believed or shown to be true. For example, a social worker believes that all rape victims subsequently suffer some degree of emotional distress. The social worker sees a client who was raped and deduces that she is experiencing some distress even without her saying so. See also inductive reasoning.