defense levels
உளப்)பாதுகாப்பு நிலைகள்
தமிழ் விளக்கம்
அவமானம், பதட்டம், மோதல், சுய மரியாதை இழப்பு அல்லது வேதனையான உணர்வுகளிலிருந்தோ, எண்ணங்களிலிருந்தோ சுய கவுரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மறுத்தல், பிறர்மீது பழிசுமத்தல், நியாயப்படுத்தல் போன்ற ஆழ்மனச் செயல்முறைகளை உளப்பாதுகாப்பு முறைகள் என்று உளவியலார் கூறுகின்றனர். சுருக்கமாக, இதை மனிதர்கள் தங்கள் உளச்சிக்கல்களிலிருந்தும், மன அழுத்தத்திலிருந்தும் விடுபட தன்னுணர்வில்லாமல் சமாளிக்கக் கையாளும் பாதுகாப்பு நிலைகள். இந்தப் பாதுகாப்புச் செயல்பாடுகள் எந்த முறையில் / அளவில் வெளிப்படுகிறது என்பதை உளச்சோதனைகள் மூலம் அளந்தறியலாம். பாதுகாப்புச் செயல்பாடுகள் பொதுவாக நான்கு வகைகளில் வெளிப்படுமென்று உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்
1. ஆரோக்கியமற்ற உளப்பாதுகாப்பு முறைகள் (pathological defences) உளவியல் ரீதியாக பிரச்சனையை மறுப்பது (psychotic denial), பிரச்சனைகளுக்குப் பிறரின் சதியே காரணமென்று சந்தேகித்தல் (delusional projection)
2. மன முதிர்ச்சியற்ற உளப்பாதுகாப்பு முறைகள் (immature defences) பிரச்சனையைக் கையாளாமல் பகற்கனவு காண்பது (fantasy), பிறர் மீது பழி சுமத்துவது (projection), அச்சுறுத்தும் வகையில் அமைதி காப்பது (passive aggression), நேரடியாகப் பொருள் புரியாவண்ணம் பேசிக் குழப்புவது அல்லது ஆத்திரத்துடன் செயல்படுவது (acting out).
3. விரக்தியான பாதுகாப்பு முறைகள் (neurotic defences) எதையும் சமத்காரமாக நியாயப்படுத்துவது (intellectualization), எதிர் வினையாற்றல் (reaction formation), பிரச்சனையை எதிர்கொள்ளாமல் கைவிடல் (dissociation), மன அழுத்தத்தை அடுத்தவரிடம் காட்டுதல் (displacement), உணர்ச்சிகளைப் பொய்யாக மறைத்துக் கொள்ளல் (repression),
4. முதிர்ச்சியான உளப்பதுகாப்பு முறைகள் (mature defences) பிரச்சனையை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தல் (humour), உயர் குறிக்கோள்களை மாற்றாக்கிக் கொள்ளல் (sublimation), பிரச்சனையை அடக்கிக்கொள்ளல் (suppression), தன்னலமற்ற சேவைகளில் மனத்தை ஈடுபடுத்தல் (altruism), பிரச்சனையை நேரடியாக எதிர்கொள்ளல் (anticipation).
ஒன்றிற்கொன்று தொடர்புடைய இந்தப் பாதுகாப்பு முறைகளைப் பாதுகாப்பு செயல்பாட்டு அளவுகோளைக் கொண்டு அளந்தறியலாம். இந்த அளவுகோளின்படி முதிர்ச்சியான பாதுகாப்பு முறைகளான, பிரச்சனையை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தல், உயர்குறிக்கோள்களை மாற்றாக்கிக் கொள்ளல், பிரச்சனையை அடக்கிக்கொள்ளல், தன்னலமற்ற சேவைகளில் மனத்தை ஈடுபடுத்தல், பிரச்சனையை எதிர்கொள்ளல், தன்னம்பிக்கை, அகநோக்கு போன்ற முறைகள் உயர்நிலையிலும், மகிழ்ச்சியற்ற உணர்வுகளை மறைத்துக் கொண்டு, பிரச்சனையைக் கையாளாமல் பகற்கனவு காண்பது, பிறர் மீது பழி சுமத்துவது, அச்சுறுத்தும் வகையில் அமைதி காப்பது, நேரடியாகப் பொருள் புரியாவண்ணம் பேசிக் குழப்புவது அல்லது ஆத்திரத்துடன் செயல்படுவது, நியாயப்படுத்துவது, பிரச்சனையை எதிர்கொள்ளாமல் கைவிடல், மன அழுத்தத்தை அடுத்தவரிடம் காட்டுதல், உணர்ச்சிகளைப் பொய்யாக மறைத்துக் கொள்ளல் போன்றவை இடைநிலையிலும், இது தவிர பிற முறைகளனைத்தும் உளப்பாதுகாப்புச் சீர்கேடுகளைக் குறிக்கும் அளவீடுகளாகக் கொள்ளப்படுகின்றது.

English
Related groups of defense mechanisms and coping styles that may indicate the degree to which one is adapting to stressors, used in the Defensive Functioning Scale. According to the DSM-IV (Washington, DC: American Psychiatric Association, 1994, p. 752) individuals functioning at optimal adaptive levels use coping styles such as anticipation, affiliation, altruism, humor, self-assertion, self-observation, sublimation, and suppression. The defensive level at the midpoint of this scale is the disavowal level, characterized by keeping unpleasant stressors, impulses, or ideas out of awareness by using such defenses as denial, projection, and rationalization. The poorest level of defensive functioning is defensive dysregulation.