deflation
பணச் சுருக்கம், பணப்புழக்கமின்மை, பணவாட்டம்
தமிழ் விளக்கம்
விலைவாசி குறைவது, பணத்தின் வாங்கும் சக்தி அதிகரிப்பது போன்றவை இதன் அறிகுறிகள் பணவீக்கத்திற்கு எதிரான சொல் - பொருளாதாரத்தில் பணவாட்டம் என்பது பண்டங்கள் மற்றும் சேவைகளின் (goods & Services) விலைகள் குறைந்தே காணப்படும் நிலை. வருடாந்திர பணவீக்கத்தின் விகிதம் பூஜ்ய சதவீதத்தைவிடக் குறைவதால் பணவாட்டம் நிகழ்கிறது. இதனால் நாணயத்தின் உண்மையான மதிப்பு அதிகரித்து, குறிப்பிட்ட அளவு பணத்தில் அதிகளவு பண்டங்களை வாங்க மக்களுக்கு உதவுகிறது. இதைப் பணவீக்க விகிதத்தின் வேகக் குறைவு என்றும் சொல்லலாம். பணவீக்கம் நாணயத்தின் உண்மையான மதிப்பை காலப்போக்கில் குறைக்கிறது. ஆனால் பணவாட்டம் நாணயத்தின் உண்மையான மதிப்பை அதிகரிக்கிறது. பணவீக்கத்தைப் போன்றே பணவாட்டமும், பொருளாரதாரத்தில் ஒரு பிரச்சனையாகும் எனக் கருதுகின்றனர். பணவாட்டம் ஏற்படும்போது விலைகள் குறைவதால் உற்பத்தி குறைந்து, கூலி குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டத்தில் முடியும் ஒரு நச்சு வலையத்தை உண்டாக்குகின்றது. இதனால் பொருளாதார மந்த நிலை (economic depression) ஏற்படுகின்றது.
English
A reduction in the cost of living and general price levels of an economy.