delay of gratification
தள்ளிவைக்கப்பட்ட விருப்பம், நுகர்வைத் தாமதப்படுத்துதல்
தமிழ் விளக்கம்
தாமதப்பட்ட அல்லது ஒத்திவைக்கப்பட்ட மனமகிழ்ச்சி / மனநிறைவு என்பது எதிலும் உடனடி மகிழ்ச்சி / வெகுமதி / பலன் எதிர்பாராமல் சிறப்பான வெகுமதிக்காக / மகிழ்ச்சிக்காகக் காத்திருக்கும் மன முதிர்ச்சி நிலை. தங்களுடைய விருப்பங்களை அடம் பிடித்தாவது உடனடியாக நிறைவேற்றும் போக்கு குழந்தைகள், தற்காதல் கொண்டவர்கள், மனமுதிர்ச்சியற்றவர்கள் மற்றும் நாட்பட்ட மனக்கோளாறுள்ளவர்களின் அடையாளமாகும்.
English
An ability to postpone receiving pleasure or reward. This is an important factor in maturity and in accomplishments that take time to achieve, such as academic degrees or success in helping multiproblem families. Lack of ability to delay gratification is seen in young children, narcissistic adults, immature people, and some people with chronic mental disorders.