Delphi method

தெய்வ வாய்மொழியறிதல், வருநெறியறிதல், முன்னறிதல், முன்கணித்தல்

தமிழ் விளக்கம்

டெல்பி என்பது கிரேக்க நாட்டிலிருக்கும் தொல்பொருள் (அகழ்வாய்வு) இடம். இந்த இடத்திலிருந்துதான் தெய்வ வாய்மொழியாளர்களின் சன்னதம் (வருநெறி) கேட்கப்பட்டது. அந்தக் காரணப் பெயரிலிருந்துதான் டெல்பி முறை என்ற முன்கணிக்கும் முறை உருவாக்கப்பட்டது. தனி மனிதர்களின் மதிப்பீடுகளைவிட குழுவின் மதிப்பீடுகள் ஏற்புடையதாக இருக்கும் என்ற கருதுகோளை அடிப்படையாக வைத்து உபயோகப்படுத்தப்படுவது. இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர்களிடம் கருத்தியாலான ஒரு திட்டம் பற்றிய கேள்விகள் அனுப்பப்பட்டு, அவர்களிடம் வினவல் மறுமொழி பெறப்படும். இந்த மறுமொழிகள் கவனமாகத் தொகுக்கப்பட்டு, ஓரிரு கருத்துக்களின் சாரமாக்கி மீண்டும் நிபுணர்களின் கருத்தரிய அனுப்பப்படும். இப்படிப் பல சுற்றுகளில் நிபுணர்களிடம் கருத்துக்களைப் பெற்று, அதைத்தொகுத்து மையக்கருத்தாக்கி, பெரும்பாலான நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக்கி, அதனடிப்படையில் செயல்படத் திட்டமிடப்பட்டும். ஒரு திட்டத்தின் தேவை, அதன் பயன் மதிப்பு, அதன் சாத்தியக்கூறுகள் பற்றி நிபுணர்களிடம் பல கட்டங்களில் கேள்விகளைக் கேட்டு அவர்களின் கருத்துக்களைத் தொகுத்து அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படும் இந்த முறை சமுதாய அமைப்புப் பணியிலும், சமூகக் கொள்கை வரைவாக்கத்திலும் பயன்படுத்தப்படுகின்றது.

English

A procedure, especially in social planning and community organization, that uses a highly structured, multistage questionnaire with a group of experts or panelists so that they can make focused assessments about the desirability, value, and feasibility of a proposed plan or policy, including feedback about results.