dementia

மனத்தளர்ச்சியினால் ஏற்படும் மறதி, முதுமை மறதி, அறிவாற்றல் இழப்பு, உளத் தளர்ச்சி, மூளைத்தேய்வு

தமிழ் விளக்கம்

இது ஒருவகையான மனச் சீரழிவு நோய். இந்த நோயினால் நினைவாற்றல் இழப்பு, ஆளுமை மாற்றம், மற்றும் உறுதியான தீர்மானம் எடுக்க இயலாமை, நுட்பமாகச் சிந்திக்க இயலாமை போன்ற பல அறிகுறிகள் ஏற்படும். மறதிநோய் (Dementia என்பது 'சிதைவடையும் மனம்' என்ற பொருள் கொண்டதாகும்) ஒரு தீவிரமான உளவியல் குறைபாடாகும். ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இந்த ஞாபக மறதிக்குக் காரணமாகக் கூறப்படும் பொதுவான காரணிகள். 1.இயல்பான முதுமையடைதல, 2. மூளைக்கான குருதி வழங்கல் பாதிப்படைதல் 3. மூளைக் கட்டிகள் 4. தலையில் ஏற்படும் விபத்துக்கள் 5. நீண்ட கால, மிதமிஞ்சிய மதுப்பழக்கம் 6. அகஞ்சுரக்கும் தொகுதியின் நீர்குலைவு (harmonal imbalance) 7. வைட்டமின் குறைபாடுகள். மேலும் டிமென்ஷியா உடலியல் மாற்றங்களாலோ, பக்கவாதத்தாலோ, அல்சைமர், பார்க்கின்சன், எச்.ஐ. வி, ஹன்டிங்டன், பிக் மற்றும் ஜேக்கப் நோயினாலோ, போதைப்பொருள் உபயோகத்தாலோ வரலாம்.
மறதி என்பதும் முதுமை மறதி என்பது ஒரு குறிப்பிடத்தக்க நோய்க்குறியீடு (குறியீடுகள் மற்றும் அறிகுறிகளின் தொகுப்பு) எதையும் கொண்டிருக்காத குறைபாடாகும், இதில் ஞாபகத்திறன், கவனம், மொழி மற்றும் சிக்கல் தீர்த்தல் போன்றவற்றில் உளத்திறன் குறையும். குறைந்தபட்சம் 6 மாத கால அளவுக்கு இந்தப் பாதிப்பு தொடர்ந்தால் மட்டுமே சோதனை மூலமாக இந்நோயைக் கண்டறிய முடியும்; குறுகிய கால அளவுக்கு நீடிக்கும் மறதி உளத்தடுமாற்றம் (delirium) என்றழைக்கப்படும். எல்லாவகையான மறதிக் குறைபாடுகளிலும், உயர் மனநிலை செயல்பாடுகள் முதலில் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, நாட்பட்ட மறதி நோயில் பாதிக்கப்பட்ட நபர்கள், நேரம் (வாரத்தின் எந்த நாள், மாதத்தின் எந்த நாள், அல்லது எந்த ஆண்டு போன்றவற்றில் குழப்பம்), இடம் (அவர்கள் இருக்கும் இடத்தை அறியாத நிலை) மற்றும் மனிதர்கள் (தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அறியாத நிலை) போன்ற பல நிலைகளில் குழப்பமடைந்திருப்பாகள். முதுமை மறதிக்கு ஒரு குறிப்பிட்ட நிலை வரையிலும் சிகிச்சையளிக்கலாம். ஆனால் மறதி பொதுவாக பல்வேறுபட்ட காரணங்களால் உருவாவதால் தீர்க்க முடியாத நோயாகவுள்ளது. மறதியின் பொதுவான அறிகுறிகள்: 1. தெரிந்த நபர்களின் பெயர், வாழ்விடம் மறந்து போதல். 2. ஆரம்பத்தில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். பின் காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும். 3. வயது மறந்து போகும். 4.சொற்கள் மறந்து போகும். 5. புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலைச் சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும். 6. நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும். 7. அடிக்கடி கோபப்படல் 8. பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள் 9. தன்சுத்த வழக்கங்களை கடைப்பிடிக்கத் தவறுதல் 10. புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல். இந்த அறிகுறிகள் மன அழுத்தம் போன்ற வேறு நோய்களின் போதும் ஏற்படலாம்.

English

Deterioration of the mental processes, usually characterized by memory loss, personality change, and impaired judgment and ability to think abstractly or systematically. Dementia is caused by physiological changes, the result of stroke, Alzheimer's disease, substance abuse, medical conditions, or multiple etiologies. Some of the medical conditions related to dementia include head injury, HIV disease, Parkinson's disease, Huntington's disease, Pick's disease, and Creutzfeldt–Jakob disease.