dementia of the Alzheimer's type

அல்சைமர் நோயினால் வரும் உளத்தளர்ச்சி / மறதி

தமிழ் விளக்கம்

மறதிநோய் (Dementia என்பது 'சிதைவடையும் மனம்' என்ற பொருள் கொண்டதாகும்) ஒரு தீவிரமான உளவியல் குறைபாடாகும். ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இந்த ஞாபக மறதிக்குக் காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள் பல இருந்தாலும் அல்சைமர் நோயினாலும் இம்மறதி ஏற்படும். ஜெர்மன் விஞ்ஞானி அலோஸ் அல்சைமர் இந்த நோயைக் கண்டுபிடித்ததால், அவரது பெயரால் அல்சைமர் என அழைக்கப்படுகிறது. அல்சைமர் வியாதி உளவியல் குறைபாட்டிலாலோ, மூளையில் ஏற்படும் காயத்தினாலோ அல்லது சிறிது சிறிதாக வளரக்கூடியதாகவோ இருக்கலாம்; அல்சைமர் நோய்க்கான அறிகுறிகள் - ஞாபக மறதி (பெயரை மறப்பது, பொருளைத் தொலைப்பது, வார்த்தைகளை கண்டுபிடிக்கத் திணறுவது, யோசிப்பதில் திணறுவது, செயல்பாடுகளில் கஷ்டப்படுவது, மோசமாக மதிப்பீடு செய்வது மற்றும் முடிவு எடுப்பது, நேரம், தேதி மற்றும் இடத்தின் திசையமைவை இழப்பது, தொடர்பாற்றலில் பிரச்சனை, ஆளுமையில் மாற்றங்கள், குணங்களில் மாற்றங்கள், பிரமைகள் மற்றும் மாயத்தோற்றங்கள்.

English

See Alzheimer’s disease.