democratic socialism
ஜனநாயக சோசலிசம், சோசலிச குடியரசு
தமிழ் விளக்கம்
சோசலிசக் குடியரசு அல்லது சமதர்மக் குடியரசு (socialist state அல்லது socialist republic) என்பது சமத்துவ சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்பும் பொருட்டு அரசமைப்புச் சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்படும் ஓர் அரசு ஆகும். ஒரு தனிப்பட்ட நாட்டில் கம்யூனிசப் புரட்சிக்குப் பிறகு அமையும் அரசு, சோசலிசக் குடியரசாக இருக்கும் என கார்ல் மார்க்ஸ் வரையறுக்கிறார். சோசலிசம் அல்லது சமதர்மம் என்ற சொல்லாட்சி, மார்க்சின் காலத்துக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருக்கிறது. உழைப்பிற்கேற்ற ஊதியம் அனைவருக்கும் வழங்கும் சமூகத்தைச் சோசலிச சமூகம் என அழைக்கின்றனர். இதனை லட்சியமாகக் கொண்டு, அதற்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் குடியரசுகளே சோசலிசக் குடியரசுகளாகும். சோவியத் ஒன்றியம் உலகின் முதல் சோசலிசக் குடியரசாக இருப்பினும், 1871 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தின் மத்தியில், பிரெஞ்சு நாட்டில் அமைந்த பாரிஸ் கம்யூன், சோசலிசக் குடியரசுக்கான பண்பு நலன்களைக் கொண்டிருந்தது. இந்த அரசு மே 28, 1871 இல் கலைக்கப்பட்டது. இன்றைக்குப் பெரும்பாலான நாடுகள் தங்களைச் சோசலிசக் குடியரசுகளாகவே அறிவித்திருக்கின்றன. இந்தியாவும் ஜனநாயக சோசலிசக் குடியரசே.
English
Socialism in a nation whose citizens have freely elected to have that form of political and socioeconomic system.