demography

மக்கள் தொகையியல், மக்கள் கணிப்பியல், குடிவிபரவியல், பிறப்பு இறப்பு பற்றிய புள்ளி விவர ஆய்வு, மக்களின் பல்வேறு பண்புகள் (வயது, பாலினம், கல்வி) பற்றிய புள்ளிவிவரங்கள்

தமிழ் விளக்கம்

மக்கள்தொகை என்பது உயிரியலில், ஒரு குறிப்பிட்ட சிற்றினத்தைச் சார்ந்த தங்களுக்குள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய உயிரினங்களின் தொகுப்பையும்; சமூகவியலில் அது மனிதர்களின் தொகுப்பையும் குறிக்கும். சமூகவியல் கண்ணோட்டத்தில் மக்கள் தொகை (குடித்தொகை, சனத்தொகை) என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது அதன் ஒரு பகுதியில் வாழ்கின்றவர்களின் எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கையைப் பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, கணக்கெடுப்பு நடத்தி உறுதி செய்கின்றன. மக்கள் தொகையின் அளவு, பிறப்பு, மரணம், இடப்பெயர்வு போன்றவற்றால் மாறுவதுடன், வயது, பாலினம், கல்வி, திருமணம், விவாகரத்து, வேலைவாய்ப்பு, மொழி, இனம், வாழ்விட வசதிகள், நோய்கள், குற்றங்கள் போன்றவற்றால் மக்கள் தொகையின் பண்புகளும் மாறிக்கொண்டே வரும் தன்மை கொண்டவை. முறையான முன்னேற்றத் திட்டமிடலுக்கு, உற்பத்தி முறைகள் மற்றும் விநியோக முறைகளை ஒழுங்குபடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் அதன் மீதான ஆய்வுகளும் மிக அவசியம்.

English

The systematic study of population variables and characteristics. See also psychographics.