Denotified and Nomadic Tribes

பட்டியலிடப்பட்ட சீர்மரபினர் மற்றும் நாடோடி குழுக்கள் / இனங்கள்

தமிழ் விளக்கம்

Denotified Tribes: குற்றச் செயல்களில் குறிப்பாக வழிப்பறி, களவு, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்று ஆங்கிலேய ஆட்சியினரால் அடையாளம் காணப்பட்ட ஜாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் அருகிலுள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளி - நிரபராதி என்ற பாகுபாடு கிடையாது. ஒரு சாதியில் பிறந்த அனைவரும் "பிறவிக் குற்றவாளிகள்' என்றது அச்சட்டம். இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்கட்கும் விதி விலக்கு கிடையாது. பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் கடவுச்சீட்டு பெறவேண்டும். இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட இன மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். இந்திய விடுதலைக்குப் பின் குற்றப் பரம்பரை சட்டத்தை நீக்கியதுடன், இந்திய அரசும், மாநில அரசுகளும், குற்றப் பரம்பரை சமூகத்தவர்களை, சீர்மரபினர் பட்டியலில் வைத்து, அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக, கல்வி நிறுவனங்களிலும் மற்றும் வேலை வாய்ப்புகளிலும் போதிய இட ஒதுக்கீடும் செய்துள்ளது.
Nomadic Tribes: நாடோடி இனங்கள் எனப்படுவோர் ஓரிடத்தில் நிலையாக வாசம் செய்யாமல், தங்களின் பிழைப்பிற்காக தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருப்பவர்கள்.

English

Denotified Tribes (DNTs) are the tribes /castes that were originally listed under the Criminal Tribes Act of 1871, as "Criminal Tribes" and "addicted to the systematic commission of non-bailable offences." Once a tribe became "notified" as criminal, all its members were required to register with the local magistrate, failing which they would be charged with a "crime" under the Indian Penal Code.
Nomadic people (or nomads) are people who move from one place to another, instead of than living in one place.