deontology

ஒழுக்கவியல், அறவியல், கடமை இயல், மற்றும் பொறுப்பு பற்றிய தத்துவ இயல்

தமிழ் விளக்கம்

நன்னெறி, நெறிமுறை அல்லது அறமுறைமை என்பது மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவு. இது நடத்தைத் தொடர்பில் சரி, பிழை ஆகிய கருத்துருக்களை முறைப்படுத்திப் பேணி, அவற்றைக் கைக்கொள்ளும்படி மக்களுக்குப் பரிந்துரை செய்வது. நன்னெறியின் முக்கியமான அம்சம் 'நல்ல வாழ்வு' ஆகும். பயனுள்ளதும், திருப்தி அளிப்பதுமான வாழ்வே முக்கியமானது எனபதே பல மெய்யியலாளரது கருத்தாகும். மனிதர்களது நன்னடத்தை தொடர்பாகவும், ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறவியல் நெறிமுறை ஆய்வு செய்கிறது.
நெறிமுறைகள் அல்லது நற்குணங்கள் என்பது கடவுளால் கொடுக்கப்பட்டதோ அல்லது இயற்கையாக வருவதோ அல்ல. பெரும்பாலோர் சமூக வழக்கு, சமய நம்பிக்கை, சட்டம் ஆகியவற்றுக்கு ஏற்ப நடந்து கொள்வதையே நெறிமுறை எனக் கருதுகின்றனர். மாறாகப் பகுத்தறிவு கொண்ட மனிதர்களுக்கு எத்தகைய நடத்தைகள் உதவுகின்றன, எத்தகைய நடத்தைகள் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்பதைத் தீர்மானிப்பதற்கு வழிகாட்டும் கருத்துருக்களும், கொள்கைகளுமே நெறிமுறைகள். சுயசிந்தனைதான் ஒருவரின் நற்குணங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. 'இயல்பறிவின் அடிப்படையில் பகுத்தறிவுக்கு ஏற்ப, அளவோடமைந்த, பொருத்தமான முடிவு' என்பதே 'நெறிமுறை' என்பதற்கான பொதுவான பொருள். இதன்படி, வேண்டுமென்றே கெட்ட நோக்கத்துடன் செய்யாமல், தேவையின் பொருட்டு அழிவு ஏற்படுத்தும் நிலையும் நெறிமுறையின் பாற்பட்டதாகவே கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உடல்ரீதியான பாதிப்பு ஏற்படக்கூடிய இக்கட்டான நிலையில், அதைத் தடுப்பதற்கு வேறு வழிகள் இல்லாதபோது, தற்காப்புக்காக எதிராளிக்குத் தேவையான அளவு பாதிப்பை ஏற்படுத்தல் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளது. நெறிமுறை, ஒழுக்கத்தைப் போல் விதி முறைகளை முன்வைப்பதில்லை. .

English

The philosophy of moral duty and obligation.