Department of Agriculture, U.S. (USDA)
(அமெரிக்க அரசின்) வேளாண்மைத் துறை
தமிழ் விளக்கம்
வேளாண்மை, உணவு, இறைச்சி, பால் உற்பத்தி போன்ற செயல்களிலும், விநியோகத்திலும், அது தொடர்பான கண்காணிப்பிற்கும் பொறுப்பான அமெரிக்க அரசின் வேளாண்மைத் துறை 1862 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விவசாய நிலங்களையும் அது தொடர்பான ஆதாரங்களையும் பாதுகாத்துப் பாராமரிப்பது இத்துறையின் பொறுப்பு. வேளாண்மைக் கல்வி மற்றும் விவசாயிகளுக்கான விரிவாக்கக் கல்வியும் இத்துறையின் கடமைகள். இத்துறையே, உணவு உதவிக்கான திட்டங்கள், உணவு அடையாளச் சீட்டு, பள்ளி மதிய உணவு திட்டம், மகளிர், மழலையர் மற்றும் குழந்தைகளுக்கான (Women,Infants,Children -WIC Program) துணை உணவு, சத்துணவுக் கல்விக்கான மாநில அரசுகளுக்கு மானியத் திட்டங்கள் போன்ற பல்வேறு வகையான உணவுப் பாதுகாப்புத் திட்டங்களைய்ம் நிர்வாகிக்கிறது.
English
The federal agency created in 1862 to administer the nation's farm programs, meat and dairy inspection, food production, and distribution; to conserve farmland and related resources; and to provide education and information to farmers. This department also administers many food assistance programs, including the Food Stamp program, the School Lunch program, and the WIC program.