Department of Education, U.S.

(அமெரிக்க அரசின்) கல்வித்துறை

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் கல்வித் துறை, 1979 ஆம் ஆண்டு, சுகாதாரம், கல்வி மற்றும் சமூகநலத் துறையிலிருந்து பிரிக்கப்பட்டு தனித்துறையானது. ஆரம்பக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி மேம்பாட்டிற்கான நிதி உதவி, கல்வி மற்றும் கற்பித்தல் முறைகளைப் பற்றிய ஆய்வு, ஊனமுற்றோர்கள், பின்தங்கிய மாணவர்கள், மீத்திறன் (gifted students) கொண்ட குழந்தைகளுக்குப் பொருத்தமான வாய்ப்புக்களை அளித்தல், மாநில மற்றும் அதற்குக் கீழுள்ள அரசமைப்புகளின் கல்வி வளர்ச்சிக்கு நிதி உதவி செய்தல், இதுதவிர தேச முழுமையும் செயல்படும் பள்ளி சமூகப்பணித் திட்டத்தை மேற்பார்வையிடல் என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றுச் செயல்படுகிறது.

English

The federal agency, created in 1979 by separation from the U.S. Department of Health, Education, and Welfare (HEW), that administers programs to provide and promote the nation's educational opportunities and to supplement state and local educational efforts. It sponsors research on teaching methods and educational programs; provides financial aid for elementary through college education; provides educational programs for disabled, disadvantaged, and gifted students; and supervises numerous educational functions including school social work programs.